×

முறையான டிக்கெட் இல்லாத பயணியை சரமாரி தாக்கிய ரயில்வே டிடிஇ சஸ்பெண்ட்

புதுடெல்லி: உத்தரப்பிரசேத்தில் பரவ்னி லக்னோ எக்ஸ்பிரஸ் ரயில் கோண்டா, பாரபங்கி இடையே நேற்று சென்று கொண்டிருந்த போது, பிரகாஷ் என்கிற துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட்டை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது, பயணி ஒருவர் அந்த வகுப்பில் பயணிப்பதற்கான முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்வதை கண்டறிந்த டிடிஇ, அந்த பயணியை ‘பளார், பளார்’ என சரமாரியாக அறைந்து கடுமையாக திட்டினார். அதோடு பயணி அணிந்திருந்த துண்டை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றார். இதை, மற்றொரு பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்த டிடிஇ, செல்போனை பறிக்க முயன்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பயணியை அடிக்கும் அதிகாரம் டிடிஇக்கு இருக்கிறதா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து, டிடிஇ பிரகாஷ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post முறையான டிக்கெட் இல்லாத பயணியை சரமாரி தாக்கிய ரயில்வே டிடிஇ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Railway DTE ,New Delhi ,Prakash ,Chief Ticket Inspector ,Konda ,Barabanki ,Uttarpraseth ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...